ADDED : ஏப் 18, 2026 03:31 PM

மந்தாரக்குப்பம்: சட்டசபை தேர்தலில், 100 சதவீதம் ஒட்டளிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி மாவட்ட நுகர்வோர் சார்பில் வாக்காளர்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
மந்தாரக்குப்பம் பஸ் நிலையம் முன்பு நடந்த நிகழ்ச்சிக்கு வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணவேனி தலைமை தாங்கினார்.
நுகர்வோர் பாதுகாப்பு பேரவை நிர்வாகிகள் பாலாஜி, ஆனந்தன், சிவசுப்பிரமணியம், பன்னீர்செல்வம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நுகர்வோர் பாதுகாப்பு தலைவர் ஆனந்தன் வரவேற்றார். வரும், 23 ம் தேதி நடக்கும் சட்டசபை தேர்தலில் 100 சதவீதம் ஒட்டளிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், பொதுமக்கள் மற்றும் வாக்காளர்களிடம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வி.ஏ.ஒ., பெருமாள், கிராம உதவியாளர் சுரேஷ், ஒருங்கிணைப்பாளர் உன்னிகிருஷ்ணன், நுகர்வோர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் ராமச்சந்திரன் ,லட்சுமிநாராயணன், தர்மலிங்கம்,பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
