ADDED : ஏப் 07, 2026 09:36 PM
அ நிறம் | அளவு
மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பத்தில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மந்தாரக்குப்பம், ஊமங்கலம், அரசக்குழி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம், 100 சதவீதம் ஓட்டுப்போடுவது குறித்து துண்டு பிரசுரங்களை வருவாய் ஆய்வாளர் ராஜதுரைவழங்கினார்.
மேலும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடம் வரும் சட்டசபை தேர்தலில் அனைவரும் ஓட்டளிக்க,விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், வி.ஏ.ஒ., பிரேம்குமார், கிராம உதவியாளர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
