ADDED : ஏப் 03, 2026 11:12 PM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் நடந்த தேர்தல் விழிப்புணர்வு பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நெல்லிக்குப்பம் நகராட்சி சார்பில், 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
நகராட்சி எல்லையில் விழிப்புணர்வு 'ஆர்ச்'சை தேர்தல் பொது பார்வையாளர் பிரித்தி ஜெயின், மாவட்ட தேர்தல் அலுவலர் செந்தில்குமார் திறந்து வைத்தனர். தொடர்ந்து பேரணி நடந்தது. பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில், 'நிச்சயம் ஓட்டு போடுவோம்' என உறுதி மொழி ஏற்றனர்.
விழிப்புணர்வு கோல போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன. சிறப்பாக பணியாற்றிய கமிஷ்னர் கிருஷ்ணராஜன் மற்றும் ஊழியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. திருக்கண்டேஸ்வரம் பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. தொகுதி தேர்தல் அலுவலர் கமலம்,டி.ஆர்.ஓ.புண்ணியகோடி, உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
