ADDED : ஏப் 09, 2026 10:16 PM

அ நிறம் | அளவு
குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடியில் தமிழக வாழ்வுரிமை கட்சி வேட்பாளர் கண்ணன் பிரசாரம் செய்தார்.
குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் தமிழக வாழ்வுரிமை கட்சி வேட்பாளர் கண்ணன், சி.என்.பாளையம், நடுவீரப்பட்டு குமளங்குளம், விலங்கல்பட்டு, வானமாதேவி, கொடுக்கன் பாளையம், வெள்ளக்கரை உள்ளிட்ட ஊராட்சிகளில், நேற்று ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அவருடன் ஒன்றிய செயலாளர்கள் தயாநிதி, தலைவர் சதாசிவம், பொருளாளர் கணபதி, தொகுதி துணை செயலாளர் குப்புசாமி, பெத்தாங்குப்பம் கணேசமூர்த்தி மற்றும், நிர்வாகிகள் உடனிருந்தனர்.
