ADDED : மார் 26, 2026 10:56 PM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலையத்தில் தேர்தல் பாதுகாப்பு குறித்து, அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் நடந்தது. இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் தலைமை தாங்கி தேர்தல் பாதுகுறிப்பு குறித்து அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாய்வு ஆலோசைனை செய்தார்.
சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன், தி.மு.க., பேரூராட்சி சேர்மன் தங்குலோத்துங்கன், பா.ம.க., அ.தி,மு.க., வி.சி.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், அனைத்து கட்சி நிர்வாகிகள் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். ஓட்டளிக்க வரும் பொதுமக்களிடம் கட்சி நிர்வாகிகள் தங்கள் சின்னத்திற்கு ஓட்டுப்போடுங்கள் என கட்டாய படுத்துதல் கூடாது.
கட்சி பேனர்கள், சுவரொட்டிகள், விளம்பரம் எழுதுதல், தேர்தல் விதிமுறையை பின்பற்றுதல் அவசியம்.
பொது இடங்களில் பிரசாரத்தை மேற்கொள்ளும் அரசியல் கட்சிகள் ஒரே சமயத்தில் எதிர், எதிர் கோணத்தில் பிரச்சாரம் செய்தலை தவிர்க்க வேண்டும், என்பன உள்ளிட்ட தேர்தல் விதிமுறைகளை பின்பற்றுவதற்கு அனைத்து கட்சி நிர்வாகிகளிடம் அறிவுறுத்தப்பட்டது.
இதில், அனைத்து கட்சி நிர்வாகிகள், போலீசார், வியாபாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
