ADDED : மார் 29, 2026 10:41 PM

மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் தேர்தல் பாதுகாப்பு குறித்து அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
இன்ஸ்பெக்டர் இளவழகி தலைம தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் கவிநிலவன் முன்னிலை வகித்தார். அதில் அனைத்து கட்சி நிர்வாகிகளும் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமால் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும்.
ஒட்டளிக்க வரும் பொதுமக்களிடம் கட்சி நிர்வாகிகள் யாரையும் கட்டாயப்படுத்துதல் கூடாது. கட்சி பேனர்கள், சுவரொட்டிகள், விளம்பரம் எழுதல் உள்ளிட்டவைகள் குறித்து தேர்தல் விதிமுறையை பின்பற்ற வேண்டும். பொது இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது அரசியல் கட்சிகள் ஒரே சமயத்தில் எதிர் எதிர் கோணத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள்வதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்டவை குறித்து அனைத்து கட்சி நிர்வாகிகளிடம் அறிவுறுத்தப்பட்டது.
இதில் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம், தனிப்பிரிவு ஜோதிமணி, அனைத்து கட்சி நிர்வாகிகள், போலீசார், வியாபாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
