தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தேர்தல் பத்திரிக்கை வழங்கல்

 தேர்தல் பத்திரிக்கை வழங்கல்

 தேர்தல் பத்திரிக்கை வழங்கல்


ADDED : ஏப் 04, 2026 09:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2026 09:31 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மந்தாரக்குப்பம்: கெங்கைகொண்டான் பேரூராட்சியில், 100 சதவீதம் ஒட்டுப் பதிவை வலியுறுத்தி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வீட வீடாக தேர்தல் பத்திரிக்கை வழங்கப்பட்டது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் 23 ம் தேதி நடக்கிறது. அதையொட்டி மாவட்டத்தில், 100 சதவீதம் ஒட்டளிக்க வலியுறுத்தி வாக்காளர்கள், பொதுமக்களிடம் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, கெங்கைகொண்டான் பேரூராட்சி சார்பில் செயல் அலுவலர் மகேஸ்வரி தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்களிடம் தாம்பூல தட்டில் தேர்தல் திருவிழா பத்திரிக்கை மற்றும் வெற்றிலை பாக்கு, புஷ்பம்,பழம் உள்ளிட்டவகளை வைத்து வரும் 23 ம் தேதி நடக்கும் சட்டசபை தேர்தலில் அனைவரும் கட்டாயம் ஓட்டளிக்க வேண்டும் என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சியில் துப்பரவு ஆய்வாளர் முகமதுயாசிக், பேரூராட்சி ஊழியர்கள் பாபு, உமர்பாரூக், துப்பரவு பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us