தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விருத்தாசலம் ஓட்டு எண்ணும் மையங்களில் தேர்தல் பார்வையாளர், டி.ஐ.ஜி., ஆய்வு

 விருத்தாசலம் ஓட்டு எண்ணும் மையங்களில் தேர்தல் பார்வையாளர், டி.ஐ.ஜி., ஆய்வு

 விருத்தாசலம் ஓட்டு எண்ணும் மையங்களில் தேர்தல் பார்வையாளர், டி.ஐ.ஜி., ஆய்வு


ADDED : மே 04, 2026 05:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 04, 2026 05:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு கல்லுாரியில் உள்ள ஓட்டு எண்ணும் மையங்களில் பார்வையாளர், டி.ஐ.ஜி., ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரி வளாகத்தில், விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி சட்டசபை தொகுதிகளின் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதனை, தேர்தல் ஓட்டு எண்ணிக்கை பார்வையாளர் அசோக்குமார் நேற்று பார்வையிட்டார். பின்னர், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் விஷ்ணுபிரியா, தமிழ்கனி ஆகியோரிடம் ஓட்டு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை வழங்கினார்.

அதேபோல், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., அருள்அரசு பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசாருக்கு அறிவுரை வழங்கினார். தேவையற்ற பிரச்னைகள் ஏற்படாத வகையில் பாரபட்சமின்றி பணிபுரியுமாறு போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

டி.எஸ்.பி., பாலகிரு ஷ்ணன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பிரகாஷ், உதயகுமார், பி.டி.ஓ., லட்சுமி, இன்ஸ்பெக்டர் பிரதாப்சந்திரன், வி.ஏ.ஓ., ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந் தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us