ADDED : மார் 20, 2026 07:54 AM

கடலுார்: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்., 23ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 30ம் தேதி துவங்கி, ஏப்., 6ம் தேதி வரை நடக்கிறது.
இதையொட்டி கடலுார் மாவட்டத்திலுள்ள, 9 சட்டசபை தொகுதிகளிலும் தேர்தல் அலுவலர்கள் மேற்பார்வையில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
கடலுார் சட்டசபை தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலராக ஆர்.டி.ஓ., சுந்தரராஜன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக சிவக்குமார் மற்றும் ஆனந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
வேட்புமனு தாக்கலின் போது மனுதாக்கல் செய்ய வருபவருடன், 5 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அதற்காக மனுதாக்கல் நடக்க உள்ள கடலுார் ஆர்.டி.ஓ., அலுவலகம் மற்றும் கடலுார் தாலுகா அலுவலகத்திலிருந்து 100 மீ., துாரத்தில் வெள்ளைக் கோடு நேற்று போடப்பட்டது. மேலும் அலுவலகங்கள் அருகில் தடுப்புக்கட்டைகள் அமைக்கப்பட உள்ளன.
