UPDATED : அக் 10, 2026 09:41 PM
ADDED : அக் 10, 2026 09:17 PM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடந்தது.
இளம் மற்றும் முதல் முறை வாக்காளர்களாக தகுதி பெற்றவர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது.
அதன்படி மாவட்டத்தில் உள்ள 2,590 ஓட்டுச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு முகாம் நடந்தது. முகாமில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் விண்ணப்பங்கள் வழங்கினர்.
