/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இறால் பண்ணையில் மின்சார கேபிள் திருட்டு
/
இறால் பண்ணையில் மின்சார கேபிள் திருட்டு
ADDED : ஜன 28, 2025 04:56 AM
கடலுார் : கடலுார் அருகே இறால் பண்ணையின் பூட்டை உடைத்து மின்சார கேபிள் மற்றும் பேட்டரி திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார் அருகே நாணமேடு, சுபா உப்பலவாடி பகுதிகளில் அடிக்கடி மின்மோட்டார் மற்றும் மின் கேபிள்கள் திருட்டு நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, சுபா உப்பலவாடி கிராமத்தில் இறால் பண்ணையின் பூட்டை உடைத்து, 700 மீட்டர் மின்சார கேபிள் மற்றும் பேட்டரிகள் திருடப்பட்ட துணிகர சம்பவம் விவசாயிகளை அச்சமடைய செய்துள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட இறால் பண்ணை நடத்திவரும், சுபா உப்பலவாடி கிராமத்தை சேர்ந்த பாக்கியராஜ், ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

