/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மின் அமைப்பாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்
/
மின் அமைப்பாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்
ADDED : டிச 23, 2024 04:41 AM

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பில் தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு சேத்தியாத் தோப்பு கிளைத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட ஆலோசகர் கோவிந்தன், மணிவேல் முன்னிலை வகித்தனர். திருஞானம் வரவேற்றார்.
மாவட்ட தலைவர் தட்சணாமூர்த்தி மின் அமைப்பாளர்களுடன் கலந்தாலோசித்து சங்கத்தின் நோக்கம் பயன்பாடுகள், நலவாரியம் மூலம் பெற வேண்டிய திட்டங்கள் செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினார். சங்க உறுப்பினர்கள் அனைவரும் குடும்ப நல அறக்கட்டளையில் சேர்ந்து பயன்பெற வேண்டும். கட்டுமான நலவாரிய பயன்கள், சலுகைகளை கட்டாயம் உறுப்பினர்கள் பயன் பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்களுக்கு காலண்டர், டூல்ஸ் பேக்குகள் ஆகியவற்றை வழங்கினர்.