/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ.2,000 லஞ்சம் வாங்கிய மின்துறை அதிகாரி கைது
/
ரூ.2,000 லஞ்சம் வாங்கிய மின்துறை அதிகாரி கைது
ADDED : ஏப் 22, 2025 07:37 AM

சேத்தியாத்தோப்பு, : கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே நங்குடி கிராமத்தை சேர்ந்தவர் மருதப்பன், 50; இவர், தனது வீட்டில் சிதம்பரத்தை சேர்ந்த கே.எஸ்.இன்போடெக் நிறுவனத்தின் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் சோலார் மின் உற்பத்தி பேனல் பொருத்தினார்.
இதில், மின் உற்பத்தியை கணக்கீடு செய்யும் பி-டைரக் ஷன் என்ற மின் மீட்டர் பொருத்த சேத்தியாத்தோப்பு மின்வாரிய அலுவலகத்தில் கடந்த வாரம் விண்ணப்பித்தார். இதற்கு உதவி மின் பொறியாளர் அம்பேத்கர், 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.
இதனை மருதப்பன், கே.எஸ்., இன்போடெக் மேலாளர் சசிதரனிடம் தெரிவித்தார். இதுகுறித்து சசிதரன் கடலுார் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசார் ஆலோசனைப்படி, அவர், ராசாயன பவுடர் தடவிய பணத்தை மின் வாரிய அலுவலகத்தில் நேற்று அம்பேத்கரிடம் கொடுத்தார்.
அங்கு, மறைந்திருந்த டி.எஸ்.பி., சத்தியராஜ் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் திருவேங்கடம், சுந்தரராஜன், அன்பழகன் ஆகியோர் அம்பேத்கரை கைது செய்தனர். இவரது சொந்த ஊரான காட்டுமன்னார்கோவில் அடுத்த மேலராதாம்பூர் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினார்.