ADDED : ஜன 02, 2024 05:57 AM

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடி எஸ்.டி., சியோன் மெட்ரிக் பள்ளியில், பிளாக் பெல்ட் பெறுவதற்கான தகுதி தேர்வு நடந்தது.
எஸ்.டி., சியோன் மெட்ரிக் பள்ளியில், ஓகேணவா கோஜி ரியோ கராத்தே பயிற்சி பள்ளி சார்பில், கராத்தே மாணவர்கள் பிளாக் பெல்ட் பெறுவதற்கான தகுதி தேர்வு நடந்தது. பள்ளி நிர்வாக இயக்குனர் தீபாசுஜின் தலைமை தாங்கினார். ஸ்ரீமுஷ்ணம் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சத்யராஜ் முன்னிலை வகித்தார்.
கராத்தே பயிற்சி பள்ளி நிறுவனர் சென்சாய் ரங்கநாதன் வரவேற்றார். பிளாக் பெல்ட் தகுதிக்கான தேர்வை பள்ளி நிர்வாகி சுஜின்சாமுவேல் துவக்கி வைத்தார். கராத்தே வீரர்கள், வீராங்கனைகள் பங்கு பெற்றதில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் பிளாக் பெல்ட் பெற தேர்வு செய்யப்பட்டனர்.
தகுதி தேர்வில் மாணவர்களுக்கு கட்டா பயிற்சி மற்றும் ஷாய் பிரிவுகள் கராத்தே வீரர்களின் தனித்திறன் பயிற்ச்சி பல்வேறு சுற்றுகளில் தகுதி நிர்ணயிக்கப்பட்டது.
தகுதி பெற்ற மாணவர்களை, கராத்தே பயிற்சியாளர்கள் ரவிக்குமார், இளவரசன், நந்தினி மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பாராட்டினர்.
