/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் மாவட்டத்தில் சிறந்த சமூக சேவகர் விருதுக்கு தகுதியனர்கள் விண்ணப்பிக்கலாம்

ADDED : ஜூன் 04, 2025 09:31 PM
கடலுார்; சமூக சேவகர் விருத்து கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்தோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
அரசு பொதுமக்களிடையே சிறப்பாக பணி செய்த சமூக சேவகர்கள் மற்றும் சமூக சேவை தொண்டு நிறுவனங்களுக்கு 'சுதந்திர தின விருது' சென்னையில் நடக்கும் வரும் 2025ம் ஆண்டு சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கி கவுரவிக்கிறார்.
இந்த விருது பெறும் சமூக சேவகர்களுக்கு அரசு ரூ.50,000 ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கிறது.
சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு ரூ.1,00,000 ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்படுகிறது. கடலுார் மாவட்டத்தில் சிறப்பாக சேவை செய்து தகுதி உள்ள சமூக சேவர்கள் சுதந்திர தின விருது பெற விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் அரசின் விருதுகள் https://awards.tn.gov.in என்ற இணையளதத்தில் வரும் 12ம் தேதிக்குள் விண்ணப்பித்து ஆவணங்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பிப்போர் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
சமூக சேவைப் பணியில் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சேவை செய்தவராக இருத்தல் வேண்டும். மொழி, இனம், பண்பாடு, அறிவியல் மற்றும் நிர்வாகம் போன்ற துறைகளில் சேவை செய்த ஆண், பெண் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.