குப்பைகளை 4 வகையாக தரம் பிரித்து வழங்க வலியுறுத்தல்
குப்பைகளை 4 வகையாக தரம் பிரித்து வழங்க வலியுறுத்தல்
UPDATED : செப் 17, 2026 04:18 PM
ADDED : செப் 17, 2026 04:11 PM

பெண்ணாடம்:பெண்ணாடம் பேரூராட்சி சார்பில், குப்பைகளை தரம் பிரித்து துாய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி, குப்பைகளை ஈரக் கழிவு, உலர் கழிவு, சுகாதார கழிவு, சிறப்பு கழிவு என 4 வகையாக பிரித்து துாய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என வார்டு மக்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, பொது மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் வீணான காய்கறிகள், டீ, காபிதுாள், முட்டை ஓடுகள், மீதமான உணவு, மாமிசக்கழிவுகளை ஈரக்கழிவுகளிலும், பிளாஸ்டிக் , பாலீதின் பைகள், குளிர்பான பாக்கெட்கள், அட்டை பெட்டி ஆகிய மக்காத குப்பைகள் அனைத்தும் உலர் கழிவுகளிலும், நாப்கின், டயாபர், பேண்டேஜ், மாஸ்க்கள் ஆகியன சுகாதார கழிவுகளிலும், மின்சாதனம், பெயிண்ட், பேட்டரிகள், மின்விளக்குகள், காலாவதியான மருந்துகள், உடைந்த கண்ணாடி உள்ளிட்ட சிறப்பு கழிவுகள் என 4 வகையாக தரம் பிரித்து துாய்மை பணியாளர்களிடம் வழங்குமாறு வார்டு மக்களிடம் பேரூராட்சி செயல் அலுவலர் மயில்வாகனன் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
துப்பரவு மேற்பார்வையாளர் ராஜ்குமார், துப்பரவு பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
