/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை ம.தி.மு.க., கூட்டத்தில் வலியுறுத்தல்
/
உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை ம.தி.மு.க., கூட்டத்தில் வலியுறுத்தல்
உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை ம.தி.மு.க., கூட்டத்தில் வலியுறுத்தல்
உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை ம.தி.மு.க., கூட்டத்தில் வலியுறுத்தல்
ADDED : ஜன 04, 2024 03:58 AM

கடலுார்: கடலுார் சிப்காட தொழிற்சாலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என ம.தி.மு.க., வலியுறுத்தியுள்ளது.
கடலுார் மாநகர தெற்கு ஒன்றிய ம.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் முதுநகரில் நேற்று நடந்தது. மாநகர செயலாளர் அய்யப்பன் தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் கலியமூர்த்தி வரவேற்றார். அவைத்தலைவர் வெங்கட்நாராயணன், மாநகர பொருளாளர் தனசேகரன் முன்னிலை வகித்தனர். கடலுார் கிழக்கு மாவட்ட செயலாளர் ராமலிங்கம் சிறப்புரையாற்றினார்.
இளைஞரணி துணை அமைப்பாளர் சிவராமன், தலைமை கழக பேச்சாளர் ராசாராமன், மாநகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், கடலுார் சிப்காட்டில் இயங்கி வரும் தொழிற்சாலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். கடலுார் சிப்காட்டில் இயங்கும் தொழிற்சாலைகள் மாசுகட்டுபாட்டு வாரிய விதிமுறைகளை கடைபிடிக்காததால், சுற்றுப்புற மக்கள் புற்றுநோய், ஆஸ்த்துமா போன்ற நோய்களால் பாதிக்கின்றனர்.
எனவே விதிமுறைகளை கடைபிடிக்காமல் இயங்கி வரும் சிப்காட் நிறுவனங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க என கலெக்டரை கேட்டுக்கொள்வது, உழவர் சந்தை, அம்மா உணவகத்தால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.