ADDED : ஏப் 17, 2026 11:29 PM

கடலுார்: கடலுார் செயின்ட் ஜோசப் கலை அறிவியல் கல்லுாரியில் டீட் டிரஸ்ட் மற்றும் ரிலையன்ஸ் பவுண்டேஷன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம் நடத்தியது.
கல்லுாரி செயலாளர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் அருமைசெல்வம், துணைமுதல்வர் ஜோன் ஆரோக்கியராஜ் முன்னிலை வகித்தனர்.
வேலைவாய்ப்பு திட்ட செயல்அலுவலர் அலெக்ஸ் வரவேற்றார். முகாமில் பாக்ஸ்கான், எம்.ஆர்.எப்., டி.வி.எஸ்., எச்.டி.பி.,பைனான்ஸ், பிரேக்ஸ் இன்டியா, மிட்சுபா, டெல்பி டி.வி.எஸ்., உட்பட 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இடம்பெற்றிருந்தன.
இதில் கல்லுாரி இறுதியாண்டு பயிலும் இளங்கலை, முதுகலை மாணவ, மாணவிகள் 1400 பேர் பங்கேற்றனர். அதில் தேர்வு செய்யப்பட்ட 900 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. முகாமில் சார்லஸ் எடிசன் மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
