/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆக்கிரமிப்பு கடைகளால் விபத்து அபாயம்
/
ஆக்கிரமிப்பு கடைகளால் விபத்து அபாயம்
ADDED : ஆக 02, 2025 07:16 AM
மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பத்தில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட இடத்தில் கடைகள் ஆக்கிரமித்துள்ளதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
மந்தாரக்குப்பத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருபுறமும் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் வடிகால் வசதியுடன் கூடிய நான்கு வழிச்சாலை அமைத்தனர். மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் சாலை விரிவாக்கம் செய்யப் பட்டது.
இந்நிலையில், சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட இடத்தில் வியாபாரிகள் தள்ளுவண்டியில் கடை அமைப்பது, மேற்கூரை அமைத்தல் என, படிப்படியாக ஆக்கிரமிக்க துவங்கியுள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், அடிக்கடி விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. சாலை ஆக்கிரமிப்பால் நான்கு வழிச்சாலை, இருவழிச்சாலையாக மாறி வருகிறது. எனவே, ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.