/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோவில் இடம் ஆக்கிரமிப்பு: கிராம மக்கள் மறியல்
/
கோவில் இடம் ஆக்கிரமிப்பு: கிராம மக்கள் மறியல்
ADDED : ஜூலை 12, 2025 03:37 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே தனிநபர் ஆக்கிமிப்பில் உள்ள அய்யனார் கோவிலை, மீட்டுத்தரக்கோரி, கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த எம்.புதுார் கிராமத்தில் அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவில், மு.பரூர் எல்லையில் உள்ளதால், அப்பகுதியை சேர்ந்த தனி நபர், அய்யனார் கோவிலுக்கு, தர்மகர்த்தா எனக் கூறி வந்துள்ளார்.
இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இந்த கோவிலுக்கு கும்பாபி ேஷகம் செய்வதாக கூறி, தனிநபர் நன்கொடை வசூல் செய்துள்ளார். ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஹிந்து அறநிலையதுறை அனுமதியின்றி கோவில் கும்பாபிேஷகம் நடத்த கூடாது எனக் கூறி, கடந்த வாரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக நேற்று மாலை தாசில்தார் அரவிந்தன் தலைமையில், தாலுகா அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், 6:45 மணி முதல், 7:00 மணி வரை தாலுகா அலுவலகம் எதிரில் மறியல் போராட்டம் நடத்தினர். விருத்தாசலம் போலீசார் சமாதானம் செய்து அனுப்பினர். இதன் காரணமாக விருத்தாசலம் - கடலுார் சாலையில் 15 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

