/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உழவர் சந்தை எதிரில் ஆக்கிரமிப்பு அகற்றம்
/
உழவர் சந்தை எதிரில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : ஜன 13, 2024 03:43 AM

கடலுார் : கடலுார் உழவர் சந்தை எதிரில் சாலையில் ஆக்கிரமிப்பு கடைகளை டிராபிக் போலீசார் அகற்றினர்.
கடலுார் உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்குவதற்கு பொதுமக்கள் வருகை அதிகரித்துள்ளது. இதற்காக, உழவர் சந்தை முன்பு இருசக்கர வாகனம் நிறுத்த இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, வாகனங்கள் நிறுத்தப்பட்டது.
தற்போது அந்த இடத்தில் கடைகள் ஆக்கிரமித்துள்ளதால், வாகனங்கள் சாலையில் நிறுத்த வேண்டியுள்ளது.
கடலுார் இம்பீரியல் சாலை மயிலாடுதுறை, காரைக்கால், நாகை, விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலையாக இருப்பதால் உழவர் சந்தை முன்பு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றது.
இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், டிராபிக் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் மற்றும் போலீசார் நேற்று ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.
மேலும், இருசக்கர வாகனம் நிறுத்த ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் கடைகள் வைக்கக்கூடாது என அறிவுறுத்தினர்.