ADDED : நவ 14, 2026 06:36 PM

அ நிறம் | அளவு
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த ஏ. மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேச பெருமாள் மகன் ராஜ்குமார்,28; மரைன் இன்ஜினியரிங் முடித்த இவர், கப்பலில் வேலை செய்து வந்தார்.
தீபாவளி விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த ராஜ்குமார் புதிதாக கட்டி வரும் வீடு கட்டுமான பணிகளை கவனித்து வந்தார். இன்று (நவ.,14) காலை 10:00 மணிக்கு கட்டுமான பணிக்கை தண்ணீர் பிடித்து வைக்க மோட்டாரை இயக்கினார். அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில், ராஜ்குமார் துாக்கியடிக்கப்பட்டு மயங்கி விழுந்தார்.
உடன் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தார். காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
