ADDED : ஜூன் 10, 2026 05:52 AM
அ நிறம் | அளவு
க டலுார் நகராட்சி 2021ம் ஆண்டு தி.மு.க., அரசு மாநகராட்சியாக தரம் உயர்த்தியது.
அதைத்தொடர்ந்து பல்வேறு திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் உதவி செயற்பொறியாளர் கோவிந்தராஜ் மாற்றப்பட்டு பல மாதங்களாகியும் புதிதாக பொறியாளர் நியமிக்கப்படவில்லை.
விழுப்புரம் நகராட்சி செயற்பொறியாளர் புவனேஸ்வரி பொறுப்பு பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் திண்டிவனம், விழுப்பும் நகராட்சிகளையும் கவனித்து வருகிறார்.
இதனால் நகராட்சியில் நடக்கும் வளர்ச்சிப்பணிகள் இவர் மூலமாகத்தான் இறுதி செய்ய வேண்டும். இதற்கு காலதாமதம் ஆவதால் பொறியாளர் காலி பணியிடத்தை உடன் நிரப்பவேண்டும்.
