தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ திட்டக்குடியில் பொறியியல் கல்லுாரி :பிரேமலதா பேச்சு 

 திட்டக்குடியில் பொறியியல் கல்லுாரி :பிரேமலதா பேச்சு 

 திட்டக்குடியில் பொறியியல் கல்லுாரி :பிரேமலதா பேச்சு 


ADDED : ஏப் 20, 2026 11:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 20, 2026 11:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திட்டக்குடி:திட்டக்குடி (தனி) சட்டசபை தொகுதி தி.மு.க., வேட்பாளர் கணேசனை ஆதரித்து, தே.மு.தி.க., பொது செயலாளர் பிரேமலதா பேசினார்.

அவர் பேசியதாவது:

நமது வேட்பாளர் கணேசன் இந்த தொகுதி வேட்பாளர். மற்றவர்கள் வேறொரு தொகுதியிலிருந்து வந்து போட்டியிடுகின்றனர். ஐந்தாவது முறையாக போட்டியிடும் கணேசனை வெற்றி பெற நீங்கள் உதவ வேண்டும்.

கடந்த, 2011ல் திட்டக்குடி தொகுதி தே.மு.தி.க.,வின் கோட்டையாக இருந்தது. இக்கூட்டணி தமிழ்நாடு முழுக்க வெற்றி பெறும் கூட்டணியாக உள்ளது. 30க்கும் மேற்பட்ட கூட்டணி கட்சிகள் உள்ளன.

வளமான கூட்டணியாக உள்ள நிலையில், ஸ்டாலின் முதல்வராக வேண்டும். நமது வேட்பாளர் வெற்றி பெற்றால் திட்டக்குடியில் பொறியியல் கல்லுாரி, பெண்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கக்கூடிய தொழிற்சாலை அமைக்கப்படும். நமது விஜயகாந்த் எப்படி சொக்கத்தங்கமோ... அதுபோல் கணேசனும் சொக்கத்தங்கம். அவரை பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us