தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பொறியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 பொறியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 பொறியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 30, 2026 06:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2026 06:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: தமிழ்நாடு பொறியாளர் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு, மத்திய அரசு பொறியாளர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலுார் புதிய கலெக்டர் அலுவலகம் முன் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு பொறியாளர் கூட்டமைப்பு நிர்வாகி செல்வம் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர்கள் சுரேஷ், கிருஷ்ண குமார், ரத்தினகுமார் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு பொறியாளர்களுக்கு இணையாக தமிழக அரசின் துறைகள், வாரியங்கள் மற்றும் கழகங்களில் பணியாற்றும் பொறியாளர்கள் மற்றும் வேளாண் அலுவலர்களுக்கு ஊதிய விகிதம் நிர்ணயிக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும், வேளாண் அலுவலர்களின் பணிநலன், பணி பாதுகாப்பு உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் கருப்பு பேட்ஜ் அணிந்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர்.

வேளாண்துறை பொறியாளர்கள் சசிகுமார், ஞானசேகரன், சிவப்பிரகாசம், பொதுப்பணித்துறை பொறியாளர்கள் கனகராஜ், வெற்றிவேல், கீதா, ரமேஷ், நீர்வளத்துறை பொறியாளர்கள் மணிவேல், வீரமணி, ராஜராஜன் உள்ளிட்ட 10 துறைகளைச் சேர்ந்த பொறியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us