ADDED : செப் 16, 2026 07:25 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் கட்டட பொறியாளர் சங்கம் சார்பில், உலக பொறியாளர் தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு, தமிழ்நாடு கட்டுமான பொறியாளர் சங்க மாநில செயலர் அருள் தலைமை தாங்கி, சங்க கொடியை ஏற்றி வைத்தார்.
மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் சுகுமார் மரக்கன்றுகளை நட்டார். இதில், முன்னாள் தலைவர்கள் சக்திவேல், காசிநாதன், வெங்கடேசன், பரணிதரன், சங்கரன், சசிகுமார், மணிகண்டன், தலைவர் மணிகண்டன், செயலாளர் முத்துக்குமார், பொருளாளர் ராஜேஷ் கண்ணா, துணை தலைவர் குணபாலன், துணை செயலாளர் அருள் பிரகாஷ், சுரேஷ்குமார் மற்றும் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
அதைத்தொடர்ந்து, அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் சார்பில், தொழில்நுட்ப கருத்தரங்கம் நடந்தது.
