ADDED : ஆக 10, 2025 11:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு : வடலுார் எஸ்.டி.ஈடன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்ற விழா நடந்தது.
பள்ளி முதல்வர் சுகிர்தாதாமஸ் தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் தீபக்தாமஸ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சாரண, சாரணியர் இயக்க மாவட்ட செயலாளர் செல்வநாதன் பேசினார். விழாவில் கவிதை, நாடகம், பேச்சுபோட்டிகள் நடந்தது.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. செயற்கை நுண்ணறிவு திறன் வரமா; சாபமா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது.