தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தொழில் முனைவோர்  விழிப்புணர்வு கருத்தரங்கு 

 தொழில் முனைவோர்  விழிப்புணர்வு கருத்தரங்கு 

 தொழில் முனைவோர்  விழிப்புணர்வு கருத்தரங்கு 


ADDED : மார் 06, 2026 03:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2026 03:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுாரில் தமிழ்நாடு புதிய தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் சார்பில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.

மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் லட்சுமி தலைமை தாங்கி கடந்த, 2020-25ம் ஆண்டுகளில் வங்கியில் பெற்ற கடனை முறையாக செலுத்தியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

தலைமை ஒருங்கிணைப்பாளர் இலியஸ் பாஷா வரவேற்றார். நபார்டு மாவட்ட வளர்ச்சி மேலாளர் சசிக்குமார், கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய பேராசிரியர் வெங்கடபதி, பல்நோக்கு மறுவாழ்வு மையம் சித்ரா ஆகியோர் மத்திய, மாநில அரசுகளின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசினர்.

சிறு, குறு தொழிலதிபர் சங்க மாநில பொதுச் செயலாளர் நித்தியானந்தம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அசோக்ராஜா, துணை செயலாளர் சாலமன், இணை இயக்குனர் ராஜகணேஷ், மாவட்ட சிறு தொழில்கள் சங்க மாவட்ட தலைவர் அசோக் உட்பட பலர் பங்கேற்றனர்.

ஏற்பாடுகளை புதிய தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் நிறுவனர் மாவட்ட வள அலுவலர் துரைராஜன் செய்திருந்தார். கருத்தரங்கில் குறு, சிறு நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களின் இயந்திரம் மற்றும் விற்பனை கண்காட்சியும் நடந்தது.

ஒருங்கிணைப்பாளர் நித்யஸ்ரீ நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us