/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
/
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : ஏப் 05, 2025 05:28 AM
சேத்தியாத்தோப்பு; கோ.ஆதனுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வேளாண் மாணவர்கள் விழப்புணர்வு பேரணி நடத்தினர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புல இறுதியாண்டு மாணவர்கள் கிராமத்தில் தங்கி வேளாண் அனுபவ பயிற்சி பெற்று வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோ.ஆதனுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுடன் இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி பேரணியை துவக்கி வைத்தார். மாணவர்கள் குழு தலைவர் சுபாஷ், துணைத் தலைவர் ஸ்ரீராம் முன்னிலை வகித்தனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தண்ணீர் சேமிப்பு, பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது உள்ளிட்ட வாசகங்களை கொண்ட பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

