
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலைக்கல்லுாரியில், சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். துணை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பொங்கல் வைத்து கொண்டாடினர். இதில், கோலப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதேபோன்று, கடலுார் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பலராமன் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதிகாரிகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் வைத்து கொண்டாடினர்.