/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆனந்தன் நினைவு கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா
/
ஆனந்தன் நினைவு கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா
ADDED : ஜன 10, 2025 11:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: குள்ளஞ்சாவடி அடுத்த வன்னியர்பாளையம் ஆனந்தன் நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு, கல்லுாரி தாளாளர் சுந்தரம் தலைமை தாங்கினார். நிறுவனர் குணசுந்தரி, செயலாளர் நிஷாந்தினி முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் ஜானகி வரவேற்றார். இதில், மாணவியர் பாரம்பரிய உடை அணிந்து ஒன்றுகூடி சமத்துவ பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். அதனைத் தொடர்ந்து பரதநாட்டியம், ஒயிலாட்டம், சமத்துவப் பொங்கலின் சிறப்பு என்ற தலைப்பில் பேச்சு மற்றும் பட்டிமன்றம் நடந்தது.
அப்போது, பேராசிரியர்கள், மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.