/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எஸ்.பி., அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா
/
எஸ்.பி., அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா
ADDED : ஜன 10, 2025 06:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் மாவட்ட காவல்அலுவலகத்தில் நேற்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
எஸ்.பி., ஜெயக்குமார் துவக்கி வைத்தார். விழாவில் புதுப்பானையில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. தொடர்ந்து உறியடித்தல், கயிறு இழுத்தல், மியூசிக்கல் சேர் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. ஏ.டி.எஸ்.பி.,க்கள் கோடீஸ்வரன், நல்லதுரை, நிர்வாக அலுவலர்கள் ஜெயராஜ், சிவகுமார், ரங்கநாதன், தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர்கள் முகமது நிசார், ராஜா மற்றும் போலீஸ் அலுவலர்கள், மனமகிழ் மன்ற பொறுப்பாளர்கள், அமைச்சு பணியாளர்கள் உள்ளிட்டோர் பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.