/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஜெயப்பிரியா பள்ளிகளில் சமத்துவ பொங்கல் விழா
/
ஜெயப்பிரியா பள்ளிகளில் சமத்துவ பொங்கல் விழா
ADDED : ஜன 19, 2024 08:22 AM

மந்தாரக்குப்பம்: நெய்வேலி வடகுத்து ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஜெயப்பிரியா வித்யாலாயா கல்வி குழும தலைவர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். பள்ளி இயக்குநர் தினேஷ் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பாரம்பரிய உடைகள் அணிந்து பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினர். பாரம்பரிய கிராமிய நடனங்கள், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், பொங்கல் சிறப்பை எடுத்துச் சொல்லும் பாடல்கள், என மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
தொடர்ந்து உறியடித்தல், கோலம், கபடி போட்டி, வழுக்கு மரம் ஏறுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப் பட்டது. விழாவில் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதே போல் விருத்தாச்சலம் ,கோபாலபுரம், திருப்பயர், தொழுதுார், நெய்வேலி - வடக்குத்து மற்றும் திரிபுரநேணியில் உள்ள ஜெயப்பிரியா பள்ளிகளில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

