
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: அரசு மருத்துவக்கல்லுாரியில், முன்னாள் மாணவர்கள் சார்பில் பிசியோதெரபி மின் சிகிச்சை உபகணரங்கள் வழங்கப்பட்டது.
கடலுார் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், கடந்த 2002--2004ம் ஆண்டு இயன்முறைத்துறையில் பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நடைபெற்றது.
இதில், முன்னாள் மாணவர்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து பிசியோதெரபி, மின் சிகிச்சை உபகரணங்களை, மருத்துவ புல முதல்வர் திருப்பதி, மருத்துவ கண்காணிப்பாளர் ஜூனியர் சுந்தரேசன் முன்னிலையில், இயன்முறை துறை தலைவர் ரவிச்சந்திரனிடம் வழங்கினர்.

