/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எருமனுார் அரசு பள்ளிக்கு சைக்கிள் ஷெட் தேவை
/
எருமனுார் அரசு பள்ளிக்கு சைக்கிள் ஷெட் தேவை
ADDED : பிப் 08, 2025 12:24 AM
விருத்தாசலம் : எருமனுார் அரசு உயர்நிலைப் பள்ளியில் சைக்கிள் ெஷட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருத்தாசலம் அடுத்த எருமனுார் அரசு உயர் நிலைப் பள்ளியில் எருமனுார், சின்னவடவாடி, எ.வடக்குப்பம், ராசாபாளையம், ரெட்டிக்குப்பம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
பெரும்பாலான மாணவர்கள் பள்ளிக்கு சைக்கிளில் வந்து செல்கின்றனர். பள்ளி வளாகத்தில் சைக்கிள் ெஷட் இல்லாததால், திறந்த வெளியில் மாணவர்கள் தங்களின் சைக்கிள்களை நிறுத்திச் செல்கின்றனர். இதனால் வெயிலிலும், மழையிலும் நனைந்து அடிக்கடி சைக்கிள் பழுதாகி வீணாகிறது. இதனால் மாணவர்கள் கடும் அவதியடைகின்றனர். எனவே, பள்ளி வளாகத்தில் சைக்கிள் ெஷட் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.