/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முன்னாள் படைவீரர் நலச்சங்க பொதுக்குழு
/
முன்னாள் படைவீரர் நலச்சங்க பொதுக்குழு
ADDED : ஏப் 22, 2025 06:50 AM

கடலுார்; கடலுாரில் மாவட்ட முன்னாள் படைவீரர் நலச்சங்கத்தின் பொதுக்குழு மற்றும் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு கூட்டம் நடந்தது.
சங்கத் தலைவர் லெப்டினன் கர்னல் நாகராஜன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஜெயராமன் வரவேற்றார். செயலாளர் கேப்டன் சவுந்தர்ராஜன், சங்கத்தின் செயல்பாடுகள் குறித்துப் பேசினார்.
பொருளாளர் சுப்பு, சங்கத்தின் வரவு, செலவு கணக்கு மற்றும் ஆண்டறிக்கையை சமர்பித்தார். கூட்டத்தில் சங்க உறுப்பினர்களின் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து புதிய பொறுப்பாளர்கள் தேர்வு நடந்தது.
ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் இளவரசன் செய்திருந்தார். இணை செயலாளர் மதியழன் நன்றி கூறினார்.