/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தொழுதுார் அணைக்கட்டில் உபரி நீர் வெளியேற்றம்
/
தொழுதுார் அணைக்கட்டில் உபரி நீர் வெளியேற்றம்
ADDED : நவ 21, 2024 05:53 AM

ராமநத்தம்: தொழுதுார் அணைக்கட்டிற்கு மழையால் நீர் வரத்து துவங்கியுள்ள நிலையில், உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
ராமநத்தம் அருகே வெள்ளாற்றின் குறுக்கே தொழுதுார் அணைக்கட்டு அமைந்துள்ளது. பெரம்பலுார் மற்றும் சேலம் மாவட்ட பகுதிகளில் பெய்யும் மழை நீர், வெள்ளாற்றில் பாய்ந்து தொழுதுார் அணைக்கட்டில் தேக்கி வைக்கப்படும்.
இதிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம், கடலுார் மற்றும் பெரம்பலுார் மாவட்டங்களைச் சேர்ந்த 26 ஏரிகளுக்கு தண்ணீர் செல்வதுடன், 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
இந்நிலையில், சேலம், பெரம்பலுார் மாவட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால், வெள்ளாற்றில் தண்ணீர் பாய்ந்து தொழுதுார் அணைக்கட்டுக்கு நீர் வரத்து கடந்த இரண்டு நாட்களாக வர துவங்கியுள்ளது. மழை தொடரும் நிலையில், அணைக்கட்டின் பெரம்பலுார் மாவட்டம் மற்றும் கடலுார் மாவட்டத்திற்கு தண்ணீர் செல்லும் வாயக்கால்கள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
இந்நிலையில், அணைக்கட்டு வாய்க்காலில் தண்ணீர் செல்லும் நிலையில், ஆபத்தை உணராமல் சிலர் மீன் பிடிப்பதும், குளிப்பதுமாக உள்ளனர். தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.