/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
த.வெ.க., மாநாடு வெற்றி பெற நிர்வாகிகள் சிறப்பு பூஜை
/
த.வெ.க., மாநாடு வெற்றி பெற நிர்வாகிகள் சிறப்பு பூஜை
த.வெ.க., மாநாடு வெற்றி பெற நிர்வாகிகள் சிறப்பு பூஜை
த.வெ.க., மாநாடு வெற்றி பெற நிர்வாகிகள் சிறப்பு பூஜை
ADDED : அக் 27, 2024 05:09 AM

கடலுார் : தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு வெற்றி பெற வேண்டி கடலுார் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் திட்டக்குடி, முக்களத்தியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்தனர்.
நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் இன்று மாலை நடக்கிறது.
மாநாட்டு பணிகளை மாநில பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
முதல் மாநில மாநாடு வெற்றி பெற வேண்டி கடலுார் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கண்ணதாசன், அசோக் தலைமையில் ஒன்றிய நிர்வாகி சீத்தாராமன், நகர தலைவர் பூக்கடை கண்ணன், நிர்வாகிகள் சந்தோஷ்ராஜ், சரத், அஜித், கார்த்திக் மற்றும் பலர் திட்டக்குடி முக்களத்தியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.