/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரயி்ல் நிலையத்தில் பணிகள் விரைந்து முடிக்க... எதிர்பார்ப்பு; மின்விசிறி இல்லாமல் பயணிகள் தவிப்பு
/
ரயி்ல் நிலையத்தில் பணிகள் விரைந்து முடிக்க... எதிர்பார்ப்பு; மின்விசிறி இல்லாமல் பயணிகள் தவிப்பு
ரயி்ல் நிலையத்தில் பணிகள் விரைந்து முடிக்க... எதிர்பார்ப்பு; மின்விசிறி இல்லாமல் பயணிகள் தவிப்பு
ரயி்ல் நிலையத்தில் பணிகள் விரைந்து முடிக்க... எதிர்பார்ப்பு; மின்விசிறி இல்லாமல் பயணிகள் தவிப்பு
ADDED : ஜூலை 22, 2025 01:17 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் ரயில்வே ஸ்டேஷனில் பல ஆண்டுகளுக்கு பிறகு கேமரா பொறுத்தியதால் நிம்மதியடைந்த பயணிகள், எஞ்சியுள்ள மேம்பாட்டுப் பணிகளையும் விரைந்து முடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை - திருச்சி, கடலுார்- சேலம் மார்க்கத்தில், விருத்தாசலம் ரயில்வே ஸ்டேஷன் முக்கிய சந்தி ப்பு. இவ்வழியாக வந்தே பாரத், தேஜாஸ், ஹம்ஸபார் சிறப்பு ரயில்கள் மற்றும் சூப்பர் பாஸ்ட், எக்ஸ்பிரஸ், பாசஞ்சர், சரக்கு என ஐம்பதுக்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கின்றன.
சரக்கு மற்றும் பயணிகள் வருகையால் கோடிக்கணக்கில் ரயில்வே நிர்வாகத்துக்கு வருவாய் கிடைக்கிறது. இருப்பினும் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் தன்னிறைவாக இல்லை. நடைமேடைகளில் சுகாதா ரமான குடிநீர், கழிவறை, இருக்கை வசதிகள், ஓய்வறை, மேற்கூரை போன்ற குறைபாடுகளால் மிகுந்த சிரமமடைந்தனர்.
இதனைச் சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் பலமுறை செய்தி வெளியானது . ரயில் பயணிகள் நலச்சங்கம், மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் விருத்தாசலம் ரயில்வே ஸ்டேஷனில் 9.5 கோடி ரூபாயில் மேம்பாட்டுப் பணிகள் நடந்தன.
அதில், அலங்கார வளைவு, அதிநவீன வசதிகளுடன் டிக்கெட் கவுண்டர், புதிய சிக்னல் அறைகள், நடைமேடைகள் முழுவதிலும் மேற்கூரை, கழிவறை, கூடுதல் இருக்கைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டன.
ஆனால், புதிதாக போடப்பட்ட மேற்கூரைகளில் மின்விசிறிகள் பொருத்தப்படவில்லை. இதனால் பகல் நேரத்தில் ரயிலுக்கு காத்திருப்போர் மிகுந்த சிரமமடைகின்றனர். குழந்தைகள், முதியோர் வெயில் காலங்களில் படாதபாடுபடும் நிலை ஏற்படுகிறது.
அதுபோல், ரயில் நிலைய முகப்பில் விரிவாக்கப் பணிக்காக அங்கிருந்த ஏ.டி.எம்., மையம் அகற்றப்பட்டது. ஆனால், பல மாதங்களாகியும் புதிதாக ஏ.டி.எம்., மையம் துவங்காததால், ரயிலுக்கு வரும் பயணிகள் பணம் எடுக்க முடியாமல் திண்டாடும் அவலம் ஏற்படுகிறது.
பயணிகளை இறக்கிவிட வருவோர் முகப்பில் நிறுத்தும் பைக், கார்களுக்கு ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் அபராதம் விதிக்கின்றனர். சிறிது நேரம் மட்டுமே வாகனங்களை நிறுத்துவோர் பாதிக்காத வகையில், மாற்று இடம் குறித்த அறிவிப்பு பலகை பொருத்த வேண்டும்.
கண்காணிப்பு கேமரா கடந்த 2016ல், நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில் ரயிலுக்கு காத்திருந்த சுவாதி என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டார். அப்போது, நடைமேடையில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் குற்றவாளியை கண்டறிவதில் போலீசாருக்கு சிக்கலை ஏற்படுத்தியது. இதனைச் சுட்டிக்காட்டி, விருத்தாசலம் ரயில்வே ஸ்டேஷனிலும் கேமரா பொறுத்த வேண்டும் என 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
தற்போது, ரயில்வே ஸ்டேஷன் மேம்படுத்தப்பட்டபோது டிக்கெட் கவுண்டர் முதல் அனைத்து நடைமேடைகள் வரை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கான கண்காணிப்பு அறை, ரயில்வே பாதுகாப்புப்படை போலீஸ் ஸ்டேஷன் மூலம் கண்காணிக்கப்படுகிறது. நடைமேடைகளில் அசம்பாவிதங்கள் மற்றும் பயணிகளின் உடமைகள் திருடுபோவது தவிர்க்கப்படும் என்பதால் பயணிகள் மகிழ்ச் சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விஷ்ணுபிரசாத் எம்.பி., கூறுகையில், 'புதிதாக அமைக்கப்பட்ட மேற்கூரைகளில் மின்விசிறி இல்லாதது மற்றும் ரயில்வே ஸ்டேஷன் முகப்பில் ஏ.டி.எம்., மையம் மீண்டும் துவங்குவது குறித்து தெற்கு ரயில்வே கோட்ட மேலாளரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
விழுப்புரம்-தாம்பரம் நீட்டிக்க கோரிக்கை விழுப்புரத்தில் இருந்து தாம்பரம் வரை தினசரி கா லை 5:20 மணிக்கு புறப்பட்டு, 8:30 மணிக்கு சென்றடைகிறது. மாலை 6:00 மணிக்கு புறப்பட்டு, இரவு 9:40 மணிக்கு விழுப்புரம் வந்தடைகிறது. இந்த ரயில் விருத்தாசலத்தில் இருந்து அதிகாலை 4:30 மணிக்கு புறப்பட்டால், ஆயிரக்கணக்கானோர் பயனடைவர்.
அதுபோல், தி னசரி வீட்டிற்கு வந்து சேர முடியும். இதனால் ரயில்வே நிர்வாகத்துக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.