தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/வில்லுப்பாட்டு நிகழ்ச்சி மூலம் வேளாண் தொழில்நுட்பம் விளக்கம்

வில்லுப்பாட்டு நிகழ்ச்சி மூலம் வேளாண் தொழில்நுட்பம் விளக்கம்

வில்லுப்பாட்டு நிகழ்ச்சி மூலம் வேளாண் தொழில்நுட்பம் விளக்கம்


ADDED : மார் 05, 2024 05:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2024 05:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த மதுராந்தகநல்லுாரில், வேளாண் உழவர் நலத்துறை சார்பில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி மூலம் வேளாண் தொழில்நுட்பம் விளக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, கீரப்பாளையம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் அமிர்தராஜ் தலைமை தாங்கினார். வேளாண் அலுவலர் சிவப்பிரியன், கடலுார் கரும்பு ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் திருமுருகன், அண்ணாமலை பல்கலைகழக உழவியல்துறை உதவி பேராசிரியர் ஆனந்தன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் சுனிதாபாரதி வரவேற்றார்.

நிகழ்ச்சியில், வில்லுப்பாட்டின் மூலம் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் செயல்படுத்தக்கூடிய திட்டங்கள், இயற்கை விவசாயம் உழவன் செயலி மூலம் வேளாண் திட்டங்கள் அதன் பயன்கள் குறித்து வில்லுப்பாட்டு மூலம் எடுத்துரைக்கப் பட்டது.

விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை திட்ட அலுவலர்கள் ஆனந்தசெல்வி, சரவணன், அபிநயா, வீராசாமி செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us