/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அஞ்சல் வழி கூட்டுறவு பயிற்சி விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
/
அஞ்சல் வழி கூட்டுறவு பயிற்சி விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
அஞ்சல் வழி கூட்டுறவு பயிற்சி விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
அஞ்சல் வழி கூட்டுறவு பயிற்சி விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
ADDED : மே 07, 2025 01:43 AM
கடலுார்: எம்.ஜி.ஆர்.,கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024---25ம் ஆண்டிற்கான 24வது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சியில் சேர விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கடலுார் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் விடுத்துள்ள செய்திகுறிப்பு: கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் 2024--25ம் ஆண்டு 24வது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர்வதற்கான விண்ணப்பத்தை www.tncu.tn.gov.in இணையதளம் மூலமாக 02.06.2025 வரை விண்ணப்பிக்க கால அளவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபரங்களுக்கு எம்.ஜி.ஆர்., கூட்டுறவு மேலாண்மை நிலையம், எண்.3 கடற்கரை சாலை, சரவணபவா கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை வளாகம், கடலுார்-1 என்ற முகவரியிலோ அல்லது 04142-222619 என்ற தொலைபேசி எண் மூலமாகவே தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.