ADDED : பிப் 04, 2026 07:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில், தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி ஓட்டுனர்களுக்கு கண் பரிசோதனை முகாம் நடந்தது.
மோட்டார் வாகன ஆய்வாளர் பெரியசாமி தலைமை தாங்கினார். விருத்தாசலம் டேனிஷ் மிஷன் கண் மருத்துவமனையில் இருந்து மருத்துவ க் குழுவினர் கண்புரை, கண்ணில் நீர்வடிதல், துாரப்பார்வை, கிட்டப்பார்வை உள்ளிட்ட குறைபாடுகளுக்கு பரிசோதனை செய்து, கண்ணாடி அணிவது உள்ளிட்ட ஆலோசனை வழங்கினர். உரிமம் புதுப்பிப்பு, புதிதாக லைசென்ஸ் மற்றும் சான்று சரிபா ர்ப்பு பணிகளுக்கு வந்திருந்த ஓட்டுனர்கள், பயிற்சிப் பள்ளி அலுவலர்களுக்கு பரிசோதனை அளிக்கப்பட்டது.

