ADDED : ஜன 10, 2026 06:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் மாநகராட்சி வரி, வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் நுகர்வோர் நலச்சங்கம் சார்பில் கண் தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சங்க தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். கவுரவத் தலைவர் கார்மேகவண்ணன் முன்னிலை வகித்தார். செயலாளர் பாலசுந்தரம் வரவேற்றார், கவுரவ ஆலோசகர் வழக்கறிஞர் அருணாசலம், மாவட்ட வழங்கல் அலுவலர் குமாரசாமி ஆகியோர், கண் தானம் வழங்க பதிவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கண் தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். விழாவில், சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

