/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரோட்டரி சார்பில் கண் சிகிச்சை முகாம்
/
ரோட்டரி சார்பில் கண் சிகிச்சை முகாம்
ADDED : ஜன 04, 2024 04:10 AM

மந்தாரக்குப்பம்: நெய்வேலி லிக்னைட் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் ஜோதி கண் பராமரிப்பு மையம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
மந்தாரக்குப்பம் திருமண மண்டபத்தில் நடந்த முகாமிற்கு ரோட்டரி உதவி ஆளுநர் நாகரத்னா தலைமை தாங்கினார். கெங்கைகொண்டான் பேரூராட்சி தலைவர் பரிதா அப்பாஸ் முன்னிலை வகித்தார் .
கண் சிகிச்சை முகாமை ரோட்டரி உதவி ஆளுநர் இந்திரன் துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக ஜோதி கண் பராமரிப்பு மைய நிறுவனர் டாக்டர் வனஜா வைத்தியநாதன் பங்கேற்றார்.
முகாமில் ஜோதி கண் பராமரிப்பு மையம் டாக்டர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர், நுாற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கண் மருத்துவ பரிசோதனை செய்தனர்.
மேலும் பார்வை குறைபாடு, கண்புரை, ரத்த அழுத்தம், விழித்திரை பாதிப்பு, கண்களில் ஏற்படும் தொற்றுகள் உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
ரோட்டரி சங்க தலைவர் நடராஜன், செயலாளர் பவுல்ராஜ், பொருளாளர் சீனிவாசன், நிர்வாகிகள் குருமூர்த்தி, டாக்டர் இளங்கோவன், சிவசங்கர், முருகானந்தம், கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர்.