ADDED : ஜூலை 08, 2025 12:36 AM

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணத்தில் இலவச கண் சிகிச்சை மற்றும் பல் மருத்துவ முகாம் நடந்தது.
புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை, ஜேசீஸ், ஆதவன் பட்டு சில்க்ஸ் அன்டு ரெடிமேட்ஸ், சங்கீதா பல் மருத்துவமனை ஆகியன இணைந்து ஆதவன் பட்டு சில்க்ஸ் நிறுவனர் ஆத்மலிங்கம் நினைவு நாளையொட்டி முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தது.
ஜேசீஸ் தலைவர் சிவராமன் தலைமை தாங்கினார். பி.பி.ஜெ கல்லூரி தாளாளர் பிரகாஷ், செல்வகுமார், பார்த்திபன் முன்னிலை வகித்தனர். சாசன தலைவர் முத்துராமலிங்கம் வரவேற்றார். ஆத்மா திட்டக்குழு தலைவர் தங்க ஆனந்தன் குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார்.
புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் அர்பித் குப்தா தலைமையில் மருத்துவ குழுவினர் கண் பரிசோதனை செய்தனர். முகாமில் பல் டாக்டர் திலீபன், முன்னாள் தலைவர் செந்துாரபாண்டியன், வேல்முருகன், மனோகர், கோபிநாத், விக்னேஷ், ஜெயபால், செயலாளர் மகேந்திரவர்மன், பொருளாளர் செல்வம், ஆதவன், பூவராகன், சக்தி பங்கேற்றனர். முகாமில் 250 பேருக்கு பங்கேற்றனர். இதில், 118 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.