
மந்தாரக்குப்பம்: நெய்வேலி லிக்னைட் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் புதுச்சேரி ஜோதி ஐகேர் சார்பில் இலவச கண்சிகிச்சை முகாம் குறவன்குப்பம் கிராமத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு ரோட்டரி திட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் சிவசங்கர்,நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சங்க தலைவர் சீனிவாசன் வரவேற்றார். புதுச்சேரி ஜோதி ஐகேர் டாக்டர் லாவன்யா தலைமையிலான மருத்துவ குழுவினர் முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு கண் ரத்த அழுத்த நோய், கிட்ட பார்வை உள்ளிட்ட அனைத்து வகையான கண் நோய்களுக்கும் பரிசோதனை செய்து ஆலோசனைகள் வழங்கினர். மேலும் மருத்துவ குழுவினர் கண்களை பராமரிப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சம்பத்குமார், கோவிந்தராஜ், ரவிச்சந்திரன், கொளஞ்சிநாதன், ராஜமாணிக்கள்,ரோட்டரி சங்க நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர். சங்க செயலாளர் சந்திரமெளலி நன்றி கூறினார்.

