ADDED : பிப் 23, 2026 03:19 AM
குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடியில் வர்த்தக சங்கம் சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது
குறிஞ்சிப்பாடி வர்த்தக சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை, கடலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம், குறிஞ்சிப்பாடி அரசுப்பள்ளியில் நடந்தது.
தமிழ்நாடு மாநில வணிகர் நல வாரிய உறுப்பினர் சண்முகம் தலைமை தாங்கினார்.
தமிழக சுகாதாரத்துறை மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்கம் மருத்துவர் ராஜமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
வர்த்தக சங்க தலைவர் மாணிக்கம், தரம்சந்த், தனகோடி, ராமலிங்கம், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி துணைத் தலைவர் ராமர், சுப்புராயர் கோவில் குமரன் ஐயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கோவை சங்கரா மருத்துவமனைக்கு, 127 பொது மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைக்கு, 55 பேர் அழைத்து செல்லப்பட்டனர்.
ஏற்பாடுகளை ஆனந்த முருகன், திமுக., நிர்வாகி வீர குணசேகரன் செய்தனர்.

