தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தற்காலிக செவிலியர் பணியிடத்திற்கு விடுபட்ட ஆவணங்கள் சமர்ப்பிக்க கெடு

தற்காலிக செவிலியர் பணியிடத்திற்கு விடுபட்ட ஆவணங்கள் சமர்ப்பிக்க கெடு

தற்காலிக செவிலியர் பணியிடத்திற்கு விடுபட்ட ஆவணங்கள் சமர்ப்பிக்க கெடு


UPDATED : அக் 04, 2026 12:00 AM

ADDED : அக் 03, 2026 07:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2026 12:00 AM ADDED : அக் 03, 2026 07:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் தற்காலிக செவிலியர்கள் பணியிடத்திற்கு விண்ணப்பித்தவர்களில் ஆவணங்கள் முழுமையில்லாதவர்கள், விடுபட்ட ஆவணங்களை வரும் 5ம் தேதி நேரில் சமர்ப்பிக்கலாம்.

கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் தற்காலிக செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக பணிபுரிய தகுதியுள்ளவர்களிடம் இருந்த கடந்த மாதம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதனை பரிசீலனை செய்ததில், முறையான ஆவணங்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களின் விபரங்கள் அடங்கிய பட்டியல் cuddalore.nic.in என்ற இணையத்தளத்தில் தெரிந்துக் கொள்ளலாம். எனவே விண்ணப்பங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் அவர்களின் பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை நாளை 5ம் தேதி மதியம் 12 மணிக்குள் கடலுாரில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us