/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் மாவட்டத்தில் போலி உர ஆலைகள்... பகீர்
/
கடலுார் மாவட்டத்தில் போலி உர ஆலைகள்... பகீர்
ADDED : செப் 28, 2024 06:50 AM

கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யாசெந்தில்குமார் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., ராஜசேகரன் முன்னிலைவகித்தார். இதில் விவசாயிகள் பேசியதாவது;
ரவிந்திரன்: காவிரி நீர் விநியோகத்தில் கீழணைக்கு கொடுக்க வேண்டிய பாசனநீரை கொடுக்க தவறிய திருச்சி மண்டல பொறியாளருக்கு கண்டனத்தை பதிவுசெய்கிறோம். கடலுார் மாவட்ட காவிரி பாசன பகுதிகளில் பாசன நீர்விநியோகத்தில் கீழணை மற்றும் வீராணம் ஏரி உட்கோட்ட நீர்பாசனபொறியாளர்கள் தண்ணீர் விநியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் 56 போலி உர ஆலைகள் இயங்கிவருகிறது.
அது தான் கடலுார் மாவட்டத்தில் பரவியுள்ளது. போலிஉர விற்பனையாளர், உற்பத்தியாளர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாதவன்;சிதம்பரம், குமராட்சி, புவனகிரி, பரங்கிப்பேட்டை பகுதி சம்பா சாகுபடிபணிகளுக்கு தேவையான தண்ணீர் கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு வரவேண்டும். சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் இருந்து மானம்பார்த்தான்வாய்க்கால், அரியகோஷ்டி வாய்க்காலுக்கு கடைமடை வரை தண்ணீர் திறந்துவிட வேண்டும். ராஜன் வாய்க்காலில் இருந்து மடப்புரம் நாஞ்சலுார், இளநாக்கூர்பகுதிக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும்.
கிருஷ்ணன்; ஆடூர்அகரம் பரதம்பட்டில், வாய்க்காலை ஆக்கிரமித்து தனிநபர் வீடுகட்டி வருகிறார். இதை அகற்ற வேண்டும். ஆடூர்அகரம் குளத்தை துார்வாரவேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்துமூட்டைக்கு 50 ரூபாய் வாங்குகின்றனர்.
செல்வராஜ்; ஸ்ரீமுஷ்ணம் அருகே வெள்ளாற்றில் கீரனுார்-குணமங்கலம் இடையேதடுப்பணை கட்ட வேண்டும். ஸ்ரீமுஷ்ணத்தில் வேளாண் உதவி இயக்குனர்அலுவலகம் கட்ட வேண்டும்.
வாக்குவாதம்
நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் வாங்குவதுதொடர்பான புகாருக்கு, தற்போது யாரும் பணம் வாங்குவதில்லை எனநுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரி கூறினார்.
இதைக்கேட்ட விவசாயிகள்,அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, பேசிய கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், நெல் கொள்முதல் நிலையத்தில் பணம் வாங்கும் புகார் குறித்து குழு அமைத்து ஆய்வு செய்துநடவடிக்கை எடுக்கப்படும். வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர்செல்கிறது.
கூடுதலாக தண்ணீர் பெற்று விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்கநடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அப்போது, வேளாண் இணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிச்சந்திரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிமேலாண் இயக்குனர் கோமதி உட்பட அரசு துறை அலுவலர்கள் மற்றும்விவசாயிகள் கலந்து கொண்டனர்.