/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இறந்த மீனவர் குடும்பத்தினர் ரூ.10 லட்சம் வழங்க கோரிக்கை
/
இறந்த மீனவர் குடும்பத்தினர் ரூ.10 லட்சம் வழங்க கோரிக்கை
இறந்த மீனவர் குடும்பத்தினர் ரூ.10 லட்சம் வழங்க கோரிக்கை
இறந்த மீனவர் குடும்பத்தினர் ரூ.10 லட்சம் வழங்க கோரிக்கை
ADDED : டிச 20, 2024 04:32 AM
கடலுார்: கடலுார் அருகே கடலில் மூழ்கி இறந்த மீனவர் குடும்பத்திற்கு 10லட்ச ரூபாய் நிவாரணம், அரசு வேலை வழங்க வேண்டும் என மாவட்ட மீன்பிடி தொழிலாளர் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
கடலுார் மாவட்ட மீன்பிடி தொழிலாளர் சங்கம் சார்பில் தலைவர் பாலு, செயலாளர் ஏழுமலை விடுத்துள்ள அறிக்கையில், கடலுார் தாலுகா, சித்திரைப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஜெகன்,32, கடந்த 15ம் தேதி அதிகாலை மீன்பிடிக்கச் சென்றபோது, படகு கவிழ்ந்து போனது. உடனிருந்தவர்கள் தப்பிய நிலையில் ஜெகன் கடலில் மூழ்கி இறந்துபோனார்.
இறந்த ஜெகன் குடும்பத்திற்கு தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு மற்றும் அவரின் மனைவிக்கு கல்வித்தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.